சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாரியப்பன் நகரில் சிவக்குமார் என்பவர் தனது தாய் நல்லம்மாள் உடன் வசித்து வந்தார். சிவக்குமாருக்கு திருமணமாகாததால் அதே பகுதியில் வசிக்கக் கூடிய அரசு ஊழியரின் மனைவியான ஜெயலட்சுமி என்பவருடன் உறவு இருந்துள்ளது.
ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து நல்லம்மாளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, மகன் சிவக்குமாரை அவர் கண்டித்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தபோது சிவக்குமார் அவரைக் கெலை செய்தார்.
பின்னர், தன் தவரை உணர்ந்த சிவக்குமார், காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்வேறு கொலை - கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது!