சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நகர காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பு வயதான ஒருவர் கைப்பையில் கஞ்சா பொட்டலங்களை வைத்துக் கொண்டு, விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறை அவரை கையும் களவுமாக பிடித்து, அவர் வைத்திருந்த பைகளை கைப்பற்றினர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் பெயர் பாட்ஷா(70) என்பதும், மரவனேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு பொட்டலம் 100 ரூபாய் வீதம் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மேல் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.