ETV Bharat / state

ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மீட்பு - railway police

சேலம்: ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் உடலை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

salem railway murder
author img

By

Published : Aug 12, 2019, 9:35 PM IST

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே ரயில்வேகேட் ரயில் பாதையில் பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சேலம் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்பு

உடற்கூறு ஆய்வில் அந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பெண் யார்? ஏன் கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் ரயிவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:சேலத்தில் பரபரப்பு கழுத்து அறுத்து இளம் பெண் கொன்று ரயில் பாதையில் சடலம் வீச்சு. தனிப்படை அமைத்து விசாரணை.Body:சேலத்தில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்து சடலம் ரயில்பாதையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது சிவதாபுரம் .
இங்கு செஞ்சிகோட்டை என்ற பகுதியில்
சேலம் - கோவை ரயில் பாதை உள்ளது.

இந்த ரெயில் பாதையில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க
பெண் கழுத்து அறுக்கப்பட்டு தலையில் இரும்பு ராடினால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இறந்து கிடந்தார் .

சடலத்தை பார்த்த பொதுமக்கள் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .
உடனே உதவி கமிஷனர் செல்வராஜ் ,ஆய்வாளர் செந்தில் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.

இறந்து கிடந்த பெண் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார்.
உடலில் சில பகுதியில் ரயில் உரசியதற்கான அடையாளம் காணப்பட்டது .

இதனால் உடனே சேலம் ஜங்ஷன் ரயில்வே போலீசாருக்கு சூரமங்கலம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜங்சன் ரெயில் நிலைய ஆய்வாளர் இளவரசி தலைமையில் ரெயில்வே போலீசார் உடனே அங்கு வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரித்தனர் .

சம்பவ இடத்துக்கு சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யும் மருத்துவர் கோகுல ரமணன் அழைத்து வரப்பட்டு அவரும் சடலத்தை பரிசோதனை செய்து பார்த்தார் .

அப்போது பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து அதற்கான அடையாளமும், தலையில் இரும்பு ராடினால் தாக்கப்பட்டதற்கு அடையாளமும் உள்ளதாக தெரிவித்தார்.

தண்டவாளம் அருகில் கைப்பை ஒன்றும் கிடந்தது. இதில் துணி மற்றும் பொருட்கள் இருந்தது. இதை வைத்து இறந்து கிடந்தது கேரள பெண்ணாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணை வேறு எங்கோ கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் சடலத்தை
செஞ்சிகோட்டை பகுதியில் உள்ள ரெயில் பாதையில் வீசி சென்றுள்ளனர் என ரயில்வே போலீசார் தெரிவித்தார்.

இந்த பெண் யார்? ஏன் கொலை செய்யப்பட்டார்? என விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஜங்சன் ரெயில் நிலைய ஆய்வாளர் இளவரசி தலைமையில் காவலர்கள் இடம் பெற்று விசாரணை செய்து வருகிறார்கள்.
.
சேலத்தில் ரயில் பாதையில் இளம்பெண் கொலை செய்து சடலத்தை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.