ETV Bharat / state

குடியிருந்த வீட்டை தீயிட்டு கொளுத்திய 'குடி'மகன் - குடியிருந்த வீட்டை தீயிட்டு கொளுத்திய மகன்

சேலம்: குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால் குடியிருந்த வீட்டை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சேலத்தில் நிகழந்துள்ளது.

a man fired his house for not given money for drunk

author img

By

Published : May 22, 2020, 12:37 PM IST

சேலம் மாவட்டம், மேச்சேரியை அடுத்த காமனேரி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். குடிப்பழக்கம் உடைய இவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இவர், குடிப்பதற்கு பணம் கேட்டு லட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட அவர், மிகுந்த ஆத்திரமடைந்து தான் வசித்துவந்த குடிசை வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதில், வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம், அரிசி, பருப்பு உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் தீயணைப்பு படையினர் , ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'சாராய ஆசை' - சாரைசாரையாய் வரிசை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.