சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் 6வது மாநில மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சேலம் மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சேலம் மண்டல தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
மாநாட்டின் நிறைவு நாளான இன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்க பட வேண்டிய நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,' போக்குவரத்துக்கழக தொழிலாளர்களில் ஓய்வூதிய தொழிலாளர்களுக்கு கடந்த 79 மாதமாக அகவிலைப்படி வழங்காமல் உள்ளனர்.அகவிலைப்படி உயர்வு வழங்க நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த பிறகும் பணப்பலன்களை வழங்காமல் உள்ளனர்.
அதையும் பணப்பலனையும், மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வூதியதாரர்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். குறிப்பாக ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் .மேலும் அவர் கூறும் போது ,' கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உட்பட போக்குவரத்து துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 100 நாட்களில் பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார் .
ஆனால் இதுவரை தேர்தல் அறிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும், மக்களை வஞ்சிக்கும் அரசாங்கமாக திமுக அரசு செயல் பட்டு வருவதாகவும் கூறினார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையுள்ள நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன் குறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவ்வாறு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்காவிட்டால் கூட்டத் தொடர் முடியும் முன்பாகவே ஓய்வு பெற்ற 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்று கூடி சென்னையில் ஏப்ரல் மாதத்திற்குள் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"தகுதி நீக்கப்பட்ட எம்.பி" - ராகுல் காந்தியின் ட்விட்டர் பயோ மாற்றம்!