ETV Bharat / state

கோழி வளர்க்க அரிசி இல்லை: சேலம் ரயில் நிலையத்துக்கு விவசாயி வெடிகுண்டு மிரட்டல்...! - மிரட்டல் கடிதம் எழுதிய விவசாயி கைது

சேலம்: வீட்டில் வளர்த்துவந்த கோழிக்கு ரேஷன் அரிசி கிடைக்காத ஆத்திரத்தில் விவசாயி ஒருவர் அரிசி வியாபாரியின் பெயரில் சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bomb thread
author img

By

Published : Oct 18, 2019, 10:52 PM IST

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என செப்டம்பர் 18 ஆம் தேதி கோட்ட மேலாளர் சுப்பாராவிற்கு கடிதம் ஒன்று வந்தது. இந்தக் கடிதம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் காவலர்கள் சேலம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர் .

ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. மிரட்டல் கடிதத்திலிருந்த முகவரியில் வசித்துவந்த நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் மின்னக்கல் பகுதியைச் சேர்ந்த அரிசி வியாபாரி மணிவேல் (50) என்பவரை அழைத்து வந்து சேலம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிவேல் ரேஷன் கடை அரிசியை வாங்கி அதனை அதிக விலைக்கு விற்றுவந்துள்ளார். பல முறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மணிவேல் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

ரவிக்குமார் கைது செய்யப்பட்ட வீடியோ

இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் துப்புதுலக்க, சேலம் ரயில் நிலைய காவல் துணை கண்காணிப்பாளர் பாபு, காவல் ஆய்வாளர் இளவரசி காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விட்ட ரவிக்குமார்
வெடிகுண்டு மிரட்டல் விட்ட ரவிக்குமார்

தனிப்படைக் குழுவினர் மணிவேலிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கடிதம் தான் எழுதவில்லை, தனக்கு வேண்டாதவர்கள் யாரும் எழுதியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிவேலுடன் நெருங்கிப் பழகி வந்தவர்கள் யார்... யார்? என பட்டியலிட்டு சேலம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர் .

இதில் திருச்செங்கோடு அருகிலுள்ள மாமுண்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற விவசாயி 20 நாள்களாக தலைமறைவாக இருப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரவிக்குமார் இன்று மாலை சேலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது அவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

ரவிக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்தான் சேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அரிசி வியாபாரி மணிவேல் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரவிக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல் துறையினரின் விசாரணையில் ரவிக்குமார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் 200-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்துவரும் ரவிக்குமார், கோழிகளுக்கு ரேஷன் அரிசியை உணவாக கொடுத்துவந்தார். இந்நிலையில் ரேஷன் அரிசி கிடைக்காததால் ரவிக்குமார் மணிவேலிடம் ரேஷன் அரிசி கேட்டுள்ளார்.

ஆனால், மணிவேல் ரவிக்குமாருக்கு ரேஷன் அரிசி வழங்க மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த ரவிக்குமார், மணிவேலை பழிவாங்க அவரது பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதி சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியதாகவும் பின்னர் தன்னை காவல் துறையினர் கைது செய்துவிடுவார்கள் என அஞ்சி தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ரவிக்குமாரிடமிருந்து செல்ஃபோன் ஒன்றும், அவரது வீட்டில் மறைத்துவைத்திருந்த ஏராளமான கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.