சேலம் வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ செண்பக மன்னர் ஜீயர் சம்பத்குமார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் குறித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
நடிகர் கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி, அவருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து நிதியுதவி வருகிறது. தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறார் இதை வன்மையாக கண்டிக்கிறோம். கமல்ஹாசன் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார். குறிப்பாக ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் நல்ல தொடர்பில் உள்ளார். எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அரசியல் லாபத்திற்காகவும் வாக்குகளை பெறுவதற்காகவும் ஒவ்வொரு இடங்களிலும் அதற்கு ஏற்றார் போல் பேசி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவரின் இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு கட்ட கண்டனப் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருக்கிறோம். இந்து தீவிரவாதம் என்று பேசிய நடிகர் கமல்ஹாசன் முஸ்லிம் தீவிரவாதிகள் இவர்கள்தான் என்று பேசிவிட முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.