ETV Bharat / state

காவல் நிலையம் அருகே இருக்கும் கடைகளில் 'கை' வைத்த கொள்ளையர்கள்!

சேலம்: ஓடும் ரயிலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து சேலம் மக்கள் இன்னமும் மீளாத நிலையில், சூரமங்கலம் காவல் நிலையம் அருகே இருக்கும் 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 7, 2019, 11:33 AM IST

ஏழு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகே கூல்ட்ரிங்க்ஸ் கடை, முடிதிருத்தும் கடை, மருந்து கடை, பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகள் உள்ளன. வழக்கம்போல நேற்று இரவு கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை கடைகளை திறக்க உரிமையாளர்கள் வந்தனர். அப்போது, அடுத்தடுத்து இருந்த 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, கடைகளில் இருந்த மொத்தம் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கொள்ளை நடந்த கடைகளை சோதனையிட்டனர். சாலையோரம் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

கடைகளில் மர்மநபர்கள் கைவரிசை!

சேலம் 7.5.2019
M.KINGMARSHAL  stringer 

சேலத்தில் காவல் நிலையம் அருகே ஏழு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை....

சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்களால் காவல்துறையினர் அதிர்ச்சி....

சேலம் அருகே ஓடும் ரயிலில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகே கூல்ட்ரிங்க்ஸ் கடை, முடிதிருத்தும் கடை, மருந்து கடை, பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல நேற்று இரவு கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதை அடுத்து நேற்று இரவு கொள்ளையர்கள் அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்து கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கடை உரிமையாளர்களுக்கும் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். 

இத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையோரம் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.