ETV Bharat / state

விவசாயி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை : சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

author img

By

Published : Aug 17, 2023, 4:38 PM IST

Salem farmer murder case: சேலம் அருகே நடந்த விவசாயி கொலை வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

விவசாயி கொலை வழக்கு 5 பேருக்கு ஆயுள் தண்டனை : சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: மகுடஞ்சாவடி அருகே ராமாபுரம் காட்டு பிள்ளையார் தோட்டம் உள்ளது . அப் பகுதியை சேர்ந்தவர் கோபால் . அவரது அண்ணன் விஜயன் . இவர்களுக்குள் பூர்வீக சொத்து நாலரை ஏக்கர் நிலமும் 9 தறி பட்டறைகளும் உள்ளது. இந்த நிலையில் விஜயன் இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து பூர்வீக சொத்தை பாக பிரிவினை செய்து கொள்வதில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அன்று இருதரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கோபாலை விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன் (33) , ராஜூ (50) , பாரதி (30) , சாந்தாமணி (53) , குருசாமி ஆகியோர் சொத்து பிரச்சனையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.

இதில் குணசேகரன் உட்பட 5 பேர் இரும்பு ராடால் கோபாலை தாக்கி உள்ளனர் . இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கோபாலின் மகன் கோகுல்ராஜ், மகுடஞ்சாவடி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் மட்டும் 9.08 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு!

அதன் அடிப்படையில் காக்காபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கு சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போதே குருசாமி இறந்துவிட்டார். மற்ற 5பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று ( ஆகஸ்ட் 17) தீர்ப்பு கூறப்பட்டது.

அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி வாதிட்டார். வழக்கில் குணசேகரன் அவரது உறவினர்கள் ரகு என்கின்ற ரகுநாதன், ராஜூ, பாரதி, சாந்தாமணி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 7000 ரூபாய் அபராதம் விதித்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற குற்றவியல் நீதிபதி ரவி தீர்ப்பளித்தார் . இதில் ஆறாவது குற்றவாளியாக இருந்த குற்றவாளி குருசாமி ஏற்கனவே இறந்து விட்டதால் அவரை விடுவிக்கப்பட்டார் .

இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேர் மீது வழக்கு - சிபிஐ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.