சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை அருகே வெல்லம் மொத்த விற்பனை மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலருக்கு தொடர்ந்து புகார் வந்தது. புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் மொத்த விற்பனை மையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சந்தேகத்திற்குரிய 41 டன் வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய மாவட்ட நியமன அலுவலர் கதிரவன், வெல்ல மண்டியில், கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்ததன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் கலப்படம் செய்யப்பட்ட 41 டன் வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தின் மாதிரிகள் உணவு தர ஆய்வுக்காக அனுப்பட்டு, கலப்படம் செய்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க:200 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்!