சேலம் மாநகராட்சி முதன்மை செயற் பொறியாளராக பணியாற்றி வரும் அசோகன் என்பவர் பொன்னம்மாபேட்டையில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இந்நிலையில் அசோகன் சென்னையில் நடைபெற்ற அரசு பொறியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தார்.
அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டு வாசலில் மிளகாய் பொடி தூவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு 40 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அசோகன் அருகிலுள்ள அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து மோப்ப நாய் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக வீட்டு வாசல் முழுவதும் மிளாகாய் பொடி தூவிவிட்டும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒயர்களை அறுத்துவிட்டு ஹார்டு டிஸ்க்குகளையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி