சேலம் மாவட்டத்தில் உச்சபட்ச அளவாக ஒரே நாளில் 191 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி சேலம் அரசு பொது மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 767 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 485 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கரோனா நோய்த்தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 971 பேர்.
இந்நிலையில், சங்ககிரி, தாதகாப்பட்டி, மல்லசமுத்திரம், சீலநாயக்கன்பட்டி, அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை கருங்கள்பட்டி ,ஆத்தூர் ,தாரமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 13 பேர் மருத்துவத்துக்கு பின்னர் வீடு திரும்பினார்கள்.
இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் அரிய பெருமானூர் பகுதியைச் சேர்ந்த 87 வயது திமுக பிரமுகர் கரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தான்; கரோனா மருந்து அல்ல!