சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா பெரியசாமி (42). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால், சூரமங்கலம் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (டிச.21) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், குற்றவாளி பெரிசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!