ETV Bharat / state

விஏஓ தற்கொலை முயற்சி; வருவாய் கோட்டாட்சியர் மிரட்டல் காரணமா? - revenue commissioner

அரக்கோணம் அருகே வருவாய் கோட்டாட்சியரின் செயல் மற்றும் மன அழுத்தம் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஏஓ தற்கொலை முயற்சி
விஏஓ தற்கொலை முயற்சி
author img

By

Published : Feb 4, 2023, 4:46 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தின் விஏஓ ஆக பணியாற்றி வருபவர் இலியாஸ் (38 ). இவர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பட்டா மாறுதல் செய்யும் போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் இலியாஸிடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய போது அந்த பட்டாவை மாறுதல் செய்து கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு வருவாய் கோட்டாட்சியர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோரிடம் பட்டாவை மாறுதல் செய்து தரக்கூடாது என்று வருவாய் கோட்டாட்சியர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலிலிருந்த விஏஓ இலியாஸ் வீட்டில் இன்று காலை 6:00 மணிக்குக் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மன உளைச்சலுக்கு ஆளான கிராம நிர்வாக அலுவலர் இலியாஸ் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது அவருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், "வருவாய் கோட்டாட்சியரின் மிரட்டல் மற்றும் மன அழுத்தத்தால் கிராம நிர்வாக அலுவலர் இலியாஸ் தற்கொலை முயற்சி செய்து கொண்டார்" என தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.