ETV Bharat / state

பத்திரப்பதிவுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராணிப்பேட்டை சார்பதிவாளர்! - Ranipet latest news

ராணிப்பேட்டை: கலவை தாலுகா சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் ரமேஷ், தனது இடைத்தரகர் மூலம் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

லஞ்சம் வாங்கிய ராணிப்பேட்டை சார்பதிவாளர்

author img

By

Published : May 26, 2021, 6:49 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (60). விவசாயியான இவர் அதே பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராஜ், முனிசாமி, ரகுநாதன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது பூர்விக சொத்தான 10 சென்ட் அளவு வீட்டை, அவரது 3 மகன்களுக்கும் சரிசமமாகப் பங்கிட்டு தர முடிவு செய்துள்ளார்.

இதற்காக, அவர் கடந்த ஏப்ரல் 31ஆம் தேதி கலவையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற போது, நிலத்தை பார்வையிட்டு பதிவு செய்து கொடுக்க மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணமாக சார்பதிவாளர் ரமேஷ் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அதற்கு முன்பணமாக ரூபாய் பத்தாயிரத்தை, அவரது அலுவலகத்தில் இடைத்தரகர் வேலு என்பவர் மூலமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கிய ராணிப்பேட்டை சார்பதிவாளர்

இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களில் நிலத்தை அளவிட்டு பத்திரத்தை தயார் செய்த சார்பதிவாளர் ரமேஷ், மீதமுள்ள லஞ்சப் பணத்தை கொடுத்து விட்டு பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்தப் பணத்தை அலுவலக உதவியாளர், சார்பதிவாளர் ரமேஷ் அறையில் இடைத்தரகர் வேலு பெற்றுக் கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக கள் விற்பனை செய்தவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.