ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மதுபானமும், போதைப்பொருள்களும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இந்தப் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். பேரணி முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தொடங்கி நகராட்சி வழியாக மீண்டும் முத்துக்கடை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.