ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்-ஈஸ்வரி தம்பதிக்கு 5 வயது மகளும், 3 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஈஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அண்மைகாலமாக செல்வகுமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஈஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து அங்கு விரைந்த காவலர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்றில் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் தந்தை தற்கொலை முயற்சி - 2 குழந்தைகள் பலி