ETV Bharat / state

கரோனாவுக்கு மருத்துவம் பார்த்த 15க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது! - கரோனாவுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர்கள்

fake doctors arrested
fake doctors arrested
author img

By

Published : Jun 26, 2020, 1:45 PM IST

Updated : Jun 26, 2020, 6:43 PM IST

13:39 June 26

ராணிப்பேட்டை: முறையான சான்றிதழ்கள் இல்லாமல் கரோனாவுக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி மருத்துவம் பார்த்த 15க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவிட்-19 தொற்று பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இத்தொற்றுக்கு எதிராக இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனாவிற்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி சிலர் மருத்துவம் பார்த்துவருவதாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுதத்து ஆட்சியர் திவ்யதர்ஷினி பிறப்பித்த உத்தரவின் பேரில் ராணிப்பேட்டையிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் கிளீனிக்குகளிலும் சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஐயப்பன் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் முறையான மருத்துவப் படிப்பு இல்லாமல் கரோனா சிகிச்சை அளிப்பதாக மருத்துவம் பார்த்துவந்த நெமிலி பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர், கலவை, அரக்கோணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா மூன்று பேர், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த இருவர் உள்பட 15க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து மருத்துவ உபகரணங்களைப் பறிமுதல் செய்த நெமிலி காவல் துறையினர், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு - பரிசோதனைகளை தீவிரம்

Last Updated : Jun 26, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.