ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவருக்கும் இவரது மனைவிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் சிலம்பரசன் என்பவருடன் சதீஷ்குமாரின் மனைவி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சதீஷ்குமார், மனைவியைச் சேர்த்துவைக்குமாறு பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் உறவினர்கள் மூலமாக மனைவியை அழைத்துவர பல்வேறுவிதமான முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் எந்த ஒரு முயற்சியும் பலனளிக்கவில்லை. இதனிடையே சிலம்பரசனும், அவரது தந்தை ராஜாவும் சதீஷ்குமாரை மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சிசெய்தார். இது குறித்து தகவலறிந்த வந்த காவல் துறையினர் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கவைத்தனர்.
இதையும் படிங்க: மண உறவைத் தாண்டிய காதலாக மாறிய செல்போன் உரையாடல்: ஆசிரியருக்கு நடந்த கொடூரம்!