ராணிப்பேட்டை: முத்துக்கடை அடுத்த நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிப்பவர் சுலைமான் (40). இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுலைமான் அப்பகுதியிலுள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்துவருகிறார்.
சுலைமானுக்கு அவரது மனைவி மும்தாஜ் மீது சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்தச்சூழலில் இன்று (ஜூலை 20) காலை 10 மணியளவில் சுலைமான் மும்தாஜிடம் சந்தேகத்தின்பேரில் வழக்கமாக தகராறு செய்தபோது ஆத்திரத்தில் திடீரென அருகே இருந்த ’ஷூ லேசால்’ மனைவி கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் மும்தாஜுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சுலைமான் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ராணிப்பேட்டை காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து மும்தாஜின் சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுலைமானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...முதியவர் மீது பாய்ந்தது போக்சோ...