ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம் (மே. 4) மட்டும் 291 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 796 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து நேற்று (மே5) ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சுகாதார பணிகளின் (பொது) இணை இயக்குனர் செந்தாமரை கண்ணன், அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அரக்கோணம் பகுதியில் கரோனா நோய் தொற்றால் இறப்போரின் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கடுமையான கட்டுபாடுகளை அமல்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : மக்களுக்கு பக்கபலமாக இருங்கள்: தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!