ETV Bharat / state

போன் செய்தால் வாடிக்கையாளர் இடத்திலே கஞ்சா டோர் டெலிவிரி - சிக்கியது எப்படி? - வாலாஜாப்பேட்டை

Drug dealer arrested in Ranipet: ராணிப்பேட்டையில் போன் செய்தால் வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Drug dealer arrested in Ranipet
போதைப்பொருள் சப்ளை செய்த நபர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 2:21 PM IST

போதைப்பொருள் சப்ளை செய்த நபர் கைது

ராணிப்பேட்டை: ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போன் செய்தால் வாடிக்கையாளரின் இடத்திற்கே சென்று போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நபரை ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் மேம்பாலம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் 2 கிலோ அளவிலான போதைபொருள் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த நபரை பிடித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பிடிபட்டவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பது தெரியவந்தது. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு போதை பொருள் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சப்ளை செய்து வந்தது யெரியவந்தது.

அதுமட்டுமின்றி இவர் மீது போதை பொருள் சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அந்த நபரின் இல்லத்தில் மறைத்து வைத்திருந்த 3 கிலோ போதைப் பொருளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பின் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தமிழகத்தில் சினிமா கலாசாரம் பெரிதாக இருக்கிறது... எல்லாவற்றையும் பெரிதாக்குவார்கள்" - சுப்பிரமணிய சாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.