ETV Bharat / state

’ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும்’ - ரோப் கார் வசதி பொருத்தம்

ராணிப்பேட்டை: ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும், அரசாங்கம் எங்களது வாழ்விற்கும் வெளிச்சம் தர வேண்டும் என்பதே டோலி தூக்கும் தொழிலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ranipet narasimma perumal
ranipet narasimma perumal
author img

By

Published : Oct 3, 2020, 10:55 AM IST

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்மப் பெருமாள் கோயில். 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்த பெற்ற லட்சுமி நரசிம்ம கோயிலாக இது உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இங்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்துடன் ஆயிரத்து 305 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் முதியவர்கள், குழந்தைகளின் சிரமத்தை போக்கும் வகையில், டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரத்து 305 படிகளில் சுமந்து கொண்டு செல்கின்றன்ர.

இந்த தொழிலை நம்பி சுமார் நாற்பது குடும்பம் இருக்கிறது. வாழையடி வாழையாக டோலி தூக்கும் தொழிலையே அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி என்று எதுவும் கிடையாது. மாதம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக கடந்த 2016ஆம் ஆண்டு ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், டோலி தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ரோப் கார் வசதி பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் இனி மகிழ்வு என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோப் கார் இயந்திரம் செயல்படுத்தப்படுவதால் எங்களுக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இதை விடுத்து வேறு தொழில் எங்களுக்கு தெரியாது என்றும் புலம்பித் தவிக்கின்றனர்.

அரசாங்கம் எங்கள ஏறெடுத்து பாக்குமா

கரோனா காலத்தில் உணவின்றி தவித்த எங்களுக்கு அரசியல் கட்சியினர் அளித்த தொகுப்பு அரிசி ஆதாரமாக இருந்தது. ஒரு சிலர் பசி, வறுமையின் பிடியில் இறந்துவிட்டனர். ரோப் கார் வருவதை நாங்கள் தடுக்கவில்லை, கோயிலில் ரோப் கார் இயக்குவது போன்ற அது தொடர்பான பணிகளை வழங்கினால் இந்த நாற்பது குடும்பங்களும் பிழைக்கும் என்று கோரிக்கை வைத்தனர்.

மலையின் மேல் உள்ள நரசிம்மரை தரிசிக்க ஏக்கத்துடன் வரும் உடல் வலிமையற்றவர்களுக்கு, உறுதுணையாய் இருக்கும் இந்த உன்னத தொழிலாளர்களின் கூக்குரல் அரசின் செவிகளில் விழுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: பிணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுக, காங்., - பொன்.ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.