ராணிப்பேட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 1950ல் வாலாஜாவில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாவலராக பணியில் சேர்ந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து 1968ல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய மனைவி 98 வயதுடையவர் சின்னம்மாள்.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரரான தேவராஜின் குடும்பத்திற்கு வங்கியின் சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போதுவரையில் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னம்மாள், தனது கணவர் வங்கியில் பணியாற்றியதற்கான சர்வீஸ் ஆர்டரை கேட்டு போராடி வரும் நிலையில், வங்கி நிர்வாகம் அதனை வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 98 வயதான சின்னம்மாள், தன் கணவர் பணியாற்றியதற்கான ஆணையை வழங்க வேண்டும் என கோரி வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்பாக இன்று(ஏப்ரல். 23) வங்கி நிர்வாகத்தை கண்டித்து கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்