ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறைக்குச் சீல் வைத்து விட்டு அலுவலகம் திரும்பினார்.
அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை அவர் செய்தார்.
இதையடுத்து இன்று (ஏப்ரல். 8) அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது நல்ல உடல் நலத்துடன் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இருப்பதாக சிஎம்சி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திய காவல் ஆணையர்