ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அம்மூர் பகுதியில் அமைந்துள்ள வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இன்று (ஆக. 5) காலை சிக்னல் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஒப்பந்த தொழிலாளர் ஐந்து பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சுற்றுசுவர் சரிந்து விழுந்தது. இதில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி(36) என்பவர் பள்ளத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவரது மனைவி உள்பட நான்கு பேர் காயங்களுடன் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரவியின் உயிரை காப்பாற்ற ரயில் காவல் துறையினர் நீண்ட நேரம் போராடியும் பலன் இல்லை. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காட்பாடி ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு