ETV Bharat / state

ஏரியில் மண் எடுப்பதை தடுத்த நபருக்கு கொலை மிரட்டல்.. பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு!

Ranipet soil robbery: ஏரியில் மண் அள்ளுவதை தடுத்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
ஏரியில் மண் அள்ளுவதை தடுத்த நபருக்கு கொலை மிரட்டல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 4:09 PM IST

ஏரியில் மண் அள்ளுவதை தடுத்த நபருக்கு கொலை மிரட்டல்

ராணிப்பேட்டை: பறக்கும் சாலை அமைப்பதற்காக செங்காடு மோட்டூர் ஏரியில் இருந்து மண் எடுக்க, எதிர்ப்பு தெரிவித்த தனி நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு பறக்கும் சாலை அமைக்க, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணிகள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால், மண் அள்ளுவதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏரியில் மண் எடுக்க வந்த இயந்திரங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் அடுத்து, மண் அள்ளும் பணியைத் தடுத்து நிறுத்திய குப்பன்(39) என்ற தனிநபருக்கு தகரகுப்பம் மற்றும் செங்காடு ஆகிய 2 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், வாலாஜாபேட்டை போலீசார் தகரகுப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கைது செய்த போலீசார், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பின்னர் பிணையில் விடுவித்தனர்.

தலைமறைவான செங்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனை தேடி வருகின்றனர். இந்த நிலையில் மண் மற்றும் நீர் வளம் காக்க ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய தனி நபருக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது" - ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.