ராணிப்பேட்டை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் அருகே வேலூரை நோக்கி சென்ற கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கர டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நெடுஞ்சாலை தடுப்வை உடைத்து எதிர்ப்புற சாலையின் குறுக்கே பாய்ந்தது. சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு அதிவேகமாக சென்ற பின் சாலை ஓரமாக நின்றது.
இந்த விபத்தின்போது எதிர்ப்புற சாலையின் வழியே வாகனங்கள் ஏதும் வராத காரணத்தினாலும், ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டின் காரணமாகவும் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட பயணிகளும் காயமும் இன்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து ரத்தினகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.