ETV Bharat / state

புதிதாக கட்டப்படும் சிஎம்சி மருத்துவமனையால் மழைநீர் செல்ல வழியின்றிபாதிப்படையும் விவசாயம்!

ராணிப்பேட்டை: கணிகாபுரம் பகுதியில் மழைநீர் போக வழியின்றி காணாற்றை மறித்து கட்டப்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையால், அப்பகுதியிலுள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Agriculture affected by the newly built CMC hospital with no way to get rainwater!

author img

By

Published : Nov 28, 2020, 11:49 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் கணிகாபுரம் பகுதியில் புதிதாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் உறுப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. மழை காலங்களில் விவசாய நிலங்களுக்கு, பின்னால் உள்ள கோணமலை மற்றும் மாங்குப்பம் மலை ஆகிய இரு மலைகளில் இருந்தும் மழை நீர் வடிவதற்காக சிஎம்சி மருத்துவமனைக்கு முன்பாக காணாறு உள்ளது.

இந்த காணாற்றின் வழியாக மலையில் இருந்து வடிந்து வரும் மழை நீரானது, எதிரேவுள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வடிகால் வழியாக வெளியேறிவிடும். இந்நிலையில் அந்த காணாற்றின் நீரோட்டத்தை தடை செய்யும் அளவிற்கு பெரும் பரப்பளவை ஆக்கிரமித்து, சிஎம்சி மருத்துவமனை வெளிப்புற கட்டிடத்தை கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மழை காலங்களில் மழைநீர் போக இடமின்றி, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்களை பாழாக்கி வருவதாக அப்பகுதி விசவாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நிவர் புயலின் காரணமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும், பயிரிடப்பட்ட நிலக்கடலையும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது

காணாற்றிற்கு இடம் விட்டு வெளிப்புறகட்டிடத்தை மாற்றி அமைக்கும்படி சிஎம்சி நிர்வாகத்திடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு சிஎம்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.

மழைநீர் போக வழியின்றி புதிதாக கட்டப்படும் சிஎம்சி மருத்துவமனை

இதுகுறித்து ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயியான பெருமாள் கூறுகையில் "காணாற்றில் மழை நீர் வடிய வழியின்றி சிஎம்சி நிர்வாகம் கட்டடம் கட்டியுள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 50 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். சிஎம்சி மருத்துவமனையின் புதிய கட்டடம் கட்ட தொடங்கியதில் இருந்தே, இந்த பிரச்னை இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை' - போக்குவரத்து காவல்துறையின் புதிய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.