ETV Bharat / state

அரசு பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

ராமநாதபுரம்: அரசு பள்ளியில் வருடத்திற்கு இருமுறை நிகழக் கூடிய நிழல் இல்லாத நாள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.

Dhanush kodi Zero shadow day
author img

By

Published : Aug 29, 2019, 10:59 PM IST

நிழலில்லா நாள் என்பது வருடத்திற்கு இருமுறை நிகழக் கூடியது. அதாவது சூரியனின் வடக்கு நகர்வு, தெற்கு நகர்வு நாட்களில் இச்சம்பவம் நிகழும். சூரியன் செங்குத்தாக ஒரு பொருள் மீது விழும் பொழுது நிழல் பூஜ்யமாக மாறுகிறது. இது நிழலில்லாத நாளாக கருதப்படுகிறது.

இது அந்தந்த பகுதியின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப அமையும். இந்நிலையில் தென் கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வருடத்திற்கு இரண்டு முறை நிகழக் கூடிய இந்த நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறுகின்றனர்.

அரசு பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

அதன்படி, இன்று ராமநாதபுரத்தில் சரியாக நண்பகல்12 மணி 14 நிமிடங்கள் முதல் 12 மணி 20 நிமிடம் வரையில் நிழலில்லா நேரம், அப்போது பள்ளியின் முன்புரத்தில் அதை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக செவ்வகம், சதுரம் உருளைகள் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டன. மாணவர்கள் வட்டமிட்டு நின்று நிழல் செங்குத்தாக மாறியதை கண்டனர். நிழலில்லா நாள் குறித்து ராஜாமணி என்ற மாணவர் சக மாணவர்களுக்கு விளக்கினார்.

Intro:இராமநாதபுரம்
ஆக.29

மின்சாரமும், குடிநீரும் இல்லாத தனுஷ்கோடி பள்ளியில் மாணவர்களுக்கு நிழலில்லா தினம் குறித்து விளக்கப்பட்டது.

Body:ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிழல் இல்லாத நாள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.

நிழலில்லா நாள் என்பது வருடத்திற்கு இருமுறை நிகழக் கூடியது. அதாவது சூரியன் வடக்கு நகர்வு தெற்கு நகர்வு நாட்களில் இது நிகழும், சூரியன் செங்குத்தாக ஒரு பொருள் மீது விழும் பொழுது நிழல் பூஜ்யமாக மாறுகிறது அதாவது அந்த பொருளினுள் அடங்கும் இது நிழலில்லாத நாளாக கூறப்படுகின்றது. ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் நிகழாது அந்தந்த பகுதியின் தீர்க்க ரேகையைக்கு ஏற்ப அமையும். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் தென் கோடியான தனுஷ்கோடியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளிக்கு முறையான மின்சார வசதியோ, குடிநீர் வசதியும் கிடையாது.
இருந்தபோதும் அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள
வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வருடத்திற்கு இரண்டு முறை நிகழக் கூடிய இந்த நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறுகின்றனர்.

இன்று ராமநாதபுரத்தில் சரியாக நண்பகல்12 14 முதல் 12:20 வரையில் நிழலில்லா நேரம், அப்போது பள்ளியின் முன்புரத்தில் அதை எளிதில் புரிந்துகொள்ள குழாய் பைப், செவ்வகம், சதுரம் உருளை செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் வட்டமிட்டு நின்று நிழல் செங்குத்தாக மாறியதை கண்டனர். நிழலில்லா நாள் குறித்து ராஜாமணி என்ற மாணவர் சக மாணவர்களுக்கு விளக்கினர்.

இதுகுறித்து மாணவர் ராஜாமணி கூறும் பொழுது
"நிழலில்லா நாள் குறித்து ஆசிரியர்கள் எங்களுக்கு விளக்கினர் பொருட்களின் மீது சூரியன் செங்குத்தாக விழுவதால் இது நிகழ்கிறது. நாங்கள் இந்த நிகழ்வை பார்த்தோம் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது " என்றார்.

தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜேம்ஸ் ஜெய செல்வி கூறியது "நிழலில்லாத நாள் வருடத்திற்கு இரண்டு முறை நிகழக்கூடியது. ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 29ம் தேதிகளில் நிகழும் என்றும் இந்த நேரத்தில் நிழல் இருக்காது அதாவது சூரியன் செங்குத்தாக வருவதால் நிழல் தெரியாது என்றார். அப்துல் கலாம் பிறந்த ஊர் என்பதாலும் இங்குள்ள மாணவர்கள் அறிவியல் ரீதியிலான விஷயங்களை அறிந்துகொள்ள எப்பொழுதும் ஆவஆர்வத்துடன்டன் இருக்கின்றனர். எங்களுடைய ஆசிரியர்கள் இது குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்" என்றார்.

மின்சார வசதி, குடிநீர் வசதி இல்லாத இந்த தனுஷ்கோடி நடுநிலை பள்ளியில் அறிவியல் நுட்பத்தை அறிய முயலும் மாணவர்களும் அதற்கு பேருதவியாக இருக்கும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.