ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி என்ற பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத 60 அடி கிணற்றில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தினேஷ் (30) என்பவர் இன்று அதிகாலை தவறி விழுந்துள்ளார்.
இதனை காலை அவ்வழியாகச் சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடலில் காயங்களுடன் தினேஷை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.