ராமநாதபுரம் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியில் இன்று பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக பரமக்குடி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பரமக்குடி தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குநர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில், அது ஆற்றுப்படுகை வரை சென்று அங்கு நின்றுவிட்டது. இதனால் கொலையாளிகள் ஆற்றில் குதித்து தப்பி இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கொல்லப்பட்ட கார்த்தி டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபர்களிடம் பணத்தை அடித்து பிடிங்கும் வழிப்பறி வழக்கிலிருந்து நேற்று காலை வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!