ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர், குமார் (35). கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரைக் காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் தனிப்பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏந்தல் கிராமத்தில் உள்ள குளத்தில் காணாமல் போன, குமாரின் ஸ்கூட்டர் கண்டெடுக்கப்பட்டது. மேலும் அருகிலிருந்த, காட்டுப் பகுதியில காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, ஒருவர் எரித்து புதைக்கப்பட்டதற்கான தடயத்தைக் கண்டறிந்தனர்.
பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தடவியல் நிருபுணர்கள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி இளைஞர் ஒருவரின் உடலை எடுத்தனர். இந்த உடலை டிஎன்ஏ சோதனைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தோண்டி எடுக்கப்பட்டுள்ள உடல் குமாருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும், காவல்துறையினர் இந்தக் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க; 'கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறிய தமிழ்நாடு'