ETV Bharat / state

செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம் - ramanadhapuram district news in tamil

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பின்போது, யாதவர் சமூகத்தை இழிவுபடுத்தியதாக கூறி யாதவர் மகா சபை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

yadav maha sabai protest against sellur raju
செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 21, 2020, 3:29 PM IST

ராமநாதபுரம்: அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பழமொழி ஒன்றை குறிப்பிட்டு பேசினார். இது, யாதவர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என அச்சமூகத்தை சேர்ந்த மக்கள் கண்டனம் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவர் மகா சபையினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

செல்லூர் ராஜுவை கண்டித்து யாதவ மகா சபை ஆர்ப்பாட்டம்

அமைச்சர் செல்லூர் ராஜுவை உடனடியாக தமிழ்நாடு அரசு பதவி விலக்கவேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். மேலும், சங்கரன் கோயில் பகுதியில் செல்லூர் ராஜு குறித்து பேசிய மூன்று சிறுவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெறவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சர்ச்சை பேச்சு! - வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.