ETV Bharat / state

கணவர் மனைவி தகராறு: குழந்தைகளின் கண் முன்னே தாய் தற்கொலை!

ராமநாதபுரம்: கமுதி அருகே கணவர் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் குழந்தைகளின் கண் முன்னே தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் கண் முன்னே தாய் தற்கொலை
குழந்தைகளின் கண் முன்னே தாய் தற்கொலை
author img

By

Published : Jan 28, 2021, 9:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்குளத்தைச் சேர்ந்தவர் வீரணத்தேவன். இவரது மனைவி சிவா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இத்தம்பதியினர் தற்போது, அபிராமம் என்னும் பகுதியில் வசித்து வருகின்றனர். வீரனத்தேவன் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜன.27) வழக்கம்போல் அவர் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால், மனமுடைந்த சிவா, தனது இரு பெண் குழந்தைகளின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிவாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மருத்துவமனை வந்த சிவாவின் உறவினர்கள், தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிவாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சிவாவிடம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் வீரணத்தேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவனிடமிருந்து மகனை தூக்கிச் செல்ல ஆட்களுடன் வந்த மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.