ETV Bharat / state

'சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்குக' - அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

girl_sexual_assault
girl_sexual_assault
author img

By

Published : Jul 7, 2020, 6:54 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அடுத்த ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மாயமான நிலையில், ஜூலை 1ஆம் தேதி வண்ணாங்குளம் ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜா என்ற சாமுவேலை(27) காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமியை கொலை செய்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் எதிரே அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராமேஸ்வரம் தாலுக்கா செயலாளர் வெங்கடேஷ்வரி தலைமை வகித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.