ராமநாதபுரம் தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி பாஜக-அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய மோடி தனி வானூர்தி மூலம் ராமநாதபுரம் வருகைதந்தார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்து சில முக்கியத் துளிகள்:
- புனிதத் தலமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்குத் தொடர்பு உண்டு.
- காசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இங்கு வந்திருக்கின்றேன்.
- ராமநாதபுரம் எனக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாமை நினைவுபடுத்துகிறது.
- நாடு 2014இல் இருந்ததை விட வறுமை ஒழிப்பு, எரிவாயு இணைப்பு வழங்குவதில் வேகமாக வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
- 2014ஆம் ஆண்டு 38 விழுக்காடு மட்டுமே இருந்த சுகாதாரம் தற்போது 98 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
- மீண்டும் பாஜக அரசு மே23இல் பதவி ஏற்ற பிறகு நீர்வள மேலாண்மைக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் அதன் மூல நீர்வளம் மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- அதேபோல் மீனவர்களுக்குத் தனி அமைச்சகமும், கிஷான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் போன்று மீனவர்களுக்கு நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
- இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை அறிந்துகொள்ளும் கருவி சொந்த மொழியில் வழங்கப்பட உள்ளது.
- காங்., துறைமுகக் கட்டுமானத்தில் அக்கறை செலுத்தவில்லை ஆனால் இந்த அரசு துறைமுகம் மூலம் நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய முடியும் என நம்புகிறோம்.
- காங்கிரஸ் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை கொண்டு கட்சி. ஆனால் எங்களுக்கு நாட்டின் நலம்தான் முக்கியம்.
- காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாக்களித்தால் பயங்கரவாதிகளுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாவதோடு, அரசியலில் குற்றவாளிகள் அதிகம் இடம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.