ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. மூலவரான மரகத நடராஜர் முன்பு அமர்ந்து அபிஷேகம் பார்க்க வேண்டும் என்பதற்காக விஐபிக்கள், பக்தர்கள் கோயிலில் நிறைந்திருந்தனர்.
மரகத நடராஜர் தரிசனத்திற்காக பாரம்பரிய அர்ச்சகர்களும் கோயில் உள்ளே நுழைந்தனர். அப்போது கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த அலுவலர்கள், நீங்கள் உள்ளே வரக்கூடாது என கோயில் இணை அணையர் தனபாலன் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அர்ச்சகர்களுக்கும் கோயில் அலுவலர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அர்ச்சகர்கள் தங்களுக்கு அவமரியாதை ஏற்படுத்திவிட்டதாக அலுவலர்களிடம் கூறிவிட்டு கோயிலுக்கு வெளியே சென்றனர். இச்சம்பவத்தால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அதிகாலையில் 'தர்பார்' ரிலீஸ் - மேள தாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்!