பிரசித்தி பெற்றத உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமிகள் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பச்சை மரகதத்தால் ஆன நடராஜர் சிலை மிகவும் பிரசித்தி வாய்ந்தது.
ஆண்டுதோறும் இந்த கோயிலில் உள்ள நடராஜர் சிலையில் உள்ள சந்தனத்தை நீக்கி ஆருத்ரா தரிசனம் நடைபெற்று புதிதாக சந்தனம் சாற்றப்படும் நிகழ்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்வைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து, பச்சை மரகத நடராஜரை வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உத்திரகோசமங்கை திருக்கோயிலில் உள்ள விநாயகருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகின்ற 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்துவருகிறது.
இதையும் படிங்க: கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பு - பக்தர்களை அனுமதித்த கோயில் நிர்வாகம்