ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள பாக்குவெட்டி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாக்குவெட்டி பகுதியியுள்ள கருவேலம் காட்டு பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமு, காளிக்கண்ணன் என்ற இருவரும் கருவேலம் காட்டுப் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்று வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இருவரை கைதுசெய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பானைகள், சாராயம் விற்ற பணம் 5700 ரூபாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கரோனா நோய்க் கிருமியின் தொற்றைத் தடுக்க மாநில அரசு மதுபானக் கடைகளை ஏப்ரல் 14ஆம் தேதி வரை மூட உத்தரவிட்ட நிலையில் இதுபோன்ற சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு தலைவலியாக மாறியுள்ளது.