இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சமுதாய காடுகள் திட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம் தொடர்பாக பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்த, 12ஆம் வகுப்பு மாணவர் சதீஸ்குமார் என்பவர், ரோலர் ஸ்கேட்டிங் மூலம் ராமநாதபுரம் இ.சி.ஆர் முதல் பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவு மண்டபம் வரை 60 கீலோ மீட்டரை கடக்க உள்ளார்.
இதுகுறித்து பேசிய மாணவர் சதீஸ்குமார், ஸ்கேட்டிங் மூலம் இந்திய அளவில் பாம்பன் பாலத்தை கடக்கும் முதல் வீரர் நான் தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். இதில் பாபா ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.