ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை பெய்துவருகிறது. நேற்று பெய்த மழையளவானது ராமநாதபுரத்தில் 26.00 மில்லி மீட்டரும், மண்டபத்தில் 78 மில்லி மீட்டரும், பரமக்குடியில் 39.00 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.
இதில், அதிகபட்ச மழைப்பொழிவாக ராமேஸ்வரத்தில் 111.00 மில்லி மீட்டரும், முதுகுளத்தூரில் 24.00 மில்லி மீட்டரும், வாலிநோக்கத்தில் 26.80 மில்லி மீட்டரும் பாம்பனில் 64.80 மில்லி மீட்டரும், கமுதியில் 16.60 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 72.00 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் மொத்த மழை அளவு 534.80 மில்லி மீட்டரும், சராசரியாக 33.43 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.