ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா கருப்பர் கோயில் அருகே வசித்து வருபவர் ரமேஷ்(35). இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக திருவாடனை பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். இதற்கு முன்னால் திருவாடனை மட்டுமல்லாமல், மற்ற ஊராட்சியிலும் தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டு தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அஞ்சுகோட்டைக்கு சென்ற அவர் மரத்தடியில் உறங்கியபோது உயிரிழந்துள்ளார். ஒருவேளை கரோனா தொற்றால் இறந்திருப்பாரோ?? என்ற அச்சத்தில், இறந்தவர் உடலை தூக்க அஞ்சுகோட்டை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் யாரும் முன்வரவில்லை.
இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் கையில் உறை மாட்டி களத்தில் இறங்கினார். அவருடன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் புர்கான் கையில் உறை மாட்டி களத்தில் இறங்கி ரமேஷ் உடலை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர். பின்னர் திருவாடனை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றார்கள்.
தூய்மை பணியாளர்கள் இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவரே இச்செயலை செய்தது பொதுமக்களிடையே அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் கார் விபத்து... ஒருவர் உயிரிழப்பு... 2 பேர் படுகாயம்!