வருகின்ற 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடு பணிகளை இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் செய்துவருகிறார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 132 வேட்பு மனுக்கள் திருவாடானை, பரமக்குடி, இராமநாதபுரம், முதுகுளத்தூரில் பெறப்பட்டு அவற்றில் 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 81 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்று (மார்ச் 22) மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து நான்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு 19 வேட்பாளர்கள் இறுதி பட்டியலும் வெளியிடப்பட்டது.
முதுகுளத்தூர் தொகுதியில் மூன்று வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டு இறுதி வேட்புமனு 22 ஆக உள்ளது. திருவாடனை தொகுதியில் 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் மூன்று வேட்புமனுக்களை திரும்பப் பெறப்பட்டன.
பரமக்குடி தொகுதியை பொறுத்தவரை 15 வேட்புமனு பெறப்பட்டது. எந்த வேட்பு மனுவும் திரும்பப் பெறப்பட வில்லை. எனவே நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, தேமுதிக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் மனு என மொத்தமாக 76 வேட்பு மனுக்கள் இறுதி பட்டியலில வெளியிடப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க...ஐநா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க மா.கம்யூ. வலியுறுத்தல்