தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 12) தொடங்கி வருகின்ற 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி (தனி) என நான்கு தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில், திருவாடனை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அன்பு பக்ருதீன் இன்று (மார்ச் 12) வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக இவர் 2011ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அங்கீகாரம் பெற்ற சின்னத்தில் இவர் போட்டியிட்டார்.
தற்போது, 2016ஆம் ஆண்டு கவுன்சிலர் பதவி வகித்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது இரண்டாவது முறையாக திருவாடானை தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் அன்பு பக்ருதீன் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்தை கூட்டணிக்கு அழைத்த கமல்