ETV Bharat / state

ஏழு லட்ச ரூபாய் சம்பாத்தியத்தை உதறிவிட்டு திருவாடானை தொகுதியில் களமிறங்கும் நாதக வேட்பாளர்!

கருவேல மரத்தை அழித்துவிட்டு 100, 50 ஏக்கர்களில் கூட்டுப் பண்ணை அமைத்தால் வாழ்வாதாரம் உயரும், வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்காது. அது மட்டுமல்லாமல் அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம். வெற்றி பெற்று திருவாடானை தொகுதி சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றார், நாம் தமிழர் கட்சி திருவாடானை வேட்பாளர் ஜவகர்.

திருவாடானை தொகுதியில் களமிறங்கும் நாதக வேட்பாளர்

author img

By

Published : Apr 3, 2021, 6:43 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் களம் இறங்கி இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஜவஹர் என்ற வேட்பாளர் களத்தில் உள்ளார். அமெரிக்காவில் கணிப்பொறித் துறை சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்த அவர், கடைசியாக பணியை விடும்போது 7 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வந்துள்ளார். அரசியல் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக அந்த வேலையை விடுத்து, நாம் தமிழர் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். அவரிடம் ஈடிவி பாரத் சார்பில் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம், அதற்கு அவர் அளித்த பதில்களை பார்க்கலாம்.

எந்த காரணத்திற்காக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?

வெளிநாட்டில் பணி செய்து, நல்ல சம்பளமும் வாங்கி வந்தேன். நமக்கு அடுத்த தலைமுறை நன்றாக வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளதா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பொது மக்களிடம் கேட்டால், அவர் சரியில்லை, இவர் சரி இல்லை என்று குறை கூறுவார்கள். சீமான் சொல்வது போல நான் சரியாக இருக்க வேண்டுமென நினைத்தேன். காலம் என்னை இங்கே எடுத்து வந்து சேர்த்துள்ளது என்றார்.

திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கும் நிலையில் ஏன் நாம் தமிழர் கட்சியை தேர்வு செய்தீர்கள்?

திராவிட கட்சிகள் உள்ள நிலையில் நீங்கள் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்று மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். திராவிட கட்சிகளின் இறுதி அத்தியாயமாக இந்தத் தேர்தலை நான் பார்க்கிறேன். மக்கள் திராவிட கட்சிகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது சீமான் என்பவரை மட்டுமே மக்களுக்கு தெரியும். இப்போது கட்சியைத் தெரியாத ஆளே இல்லை, குறிப்பாக, இளைஞர்கள் சீமான் பேச்சை கேட்கின்றனர். பெற்றோர் சொல்லும் கட்சிக்கு பிள்ளைகள் வாக்களிக்கும் நிலை மாறி, தற்போது பிள்ளைகள் சொல்லும் கட்சிக்கு பெற்றோர் வாக்களிக்கின்றனர். இதை பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன்.

திருவாடானை தொகுதியில் களமிறங்கும் நாதக வேட்பாளர்

அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலுக்கும், இங்கு நடைபெறும் தேர்தலுக்கும் இடையே உள்ள மாற்றமாக எதைப் பார்க்கிறீர்கள்?

அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் பொழுது கை அளவிலான பதாகைகள் மட்டுமே பயன்படுத்தப்படும், அதிலும் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாது. மாறாக எண்கள் மட்டுமே இடம்பெறும், அங்கே அப்படி இருக்கும் பொழுது நம் ஊரில் மட்டும் ஏன் தேர்தல் இப்படி நடக்கிறது என்று எனக்கு கோபம் வருகிறது. அமெரிக்காவில் மக்கள் பெரிய அளவில் தவறுகள் செய்தாலும், தலைவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் நம் ஊரில் மக்கள் சிறிய தவறு செய்தால், அதை பெரிய அளவில் பூதாகரமாக மாற்றுகின்றனர். 1000, 500 அபராதம் விதிக்கப்படும். ஆனால் தலைவர் எப்படி வேண்டுமானாலும் தவறை செய்து கொள்ளலாம் என்ற நிலை நம் நாட்டில் உள்ளது. நாங்கள் சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதேபோல மக்களும் நினைப்பார்கள் என்று நம்புகிறோம்.

உங்கள் பார்வையில் அரசியல் என்றால் என்ன?

என்னை போன்ற இளைஞர்களை, அரசியல் என்றால் சாக்கடை என்று நினைத்தவர்களை நாம் தமிழர் கட்சி ஒரு புள்ளியில் இணைத்தது. இது தான் சரியான அரசியலை முன்வைப்பது. வாஷிங்மிஷின், கொடுப்பதா அரசு, மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் உண்மையான அரசு, சரியான கொள்கை கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. அதனால் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

அமெரிக்காவில் எவ்வளவு சம்பளம் வாங்கி வந்தீர்கள்? நாம் தமிழர் கட்சி மீது ஆர்வம் எப்படி வந்தது?

அமெரிக்கவில் 9 ஆண்டுகள் பயணித்தேன், கடைசியாக நான் வாங்கிய சம்பளம் 7லட்சம் ரூபாய். பணம் கூடக் கூட வாழ்க்கை நல்லா இருக்கு. ஆனால், சிறுவயதில் இருந்தே அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் அரசியல் செய்து கொண்டே வந்தேன். சிறு தொண்டு செய்வது, பொங்கல் விழா நடத்துவது என தெரியாமல் அரசியல் செய்தேன். அந்த உணர்வோடு இருக்கும்போது சரியாக நாம் தமிழர் கட்சி என ஓர் கட்சி வந்தது. அதில் என்னை இணைத்துக் கொண்டு அண்ணன் தம்பியாகப் பயணித்து வந்தோம். தற்போது, கட்சி என்னை திருவாடானை வேட்பாளராக அறிவித்து ள்ளது. களப் பணி செய்து வெற்றிப் பெற்று திருவாடானையை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்.

உங்கள் பார்வையில் திருவாடானை தொகுதியில் உள்ள பிரச்னைகள் என்னென்ன?

திருவாடனை தொகுதியில் உள்ள மிக முக்கியப் பிரச்னையா நான் பார்ப்பது ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் பிரச்னை. தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக திருவாடனை தொகுதி நெற்களஞ்சியமாக விளங்குகிறது. ஆர்எஸ் மங்கலம் கண்மாய் வரும் வழிகளில் பல்வேறு இடங்களில் வரத்துக்கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் உள்ளதால் நீர்வரத்து முறையாக சென்றடையவில்லை. அதனை சீர் செய்தாலே 85% பிரச்னைகள் தீர்க்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை, உப்பூர் அனல் மின் நிலையத்தால் 22 கிராமங்களில் தொடர்ந்து பிரச்னையாகவே இருந்து வருகிறது. இதனை முதன் முதலில் எடுத்துச் சென்ற கட்சி நாம் தமிழர் கட்சிதான். ஆறு வருடங்களுக்கு முன்பே திருவாடனை தொகுதி மிக முக்கிய சுற்றுலாத் தொகுதி, காரங்காடு சூழலியல் சுற்றுலா மிக முக்கியமான சுற்றுலா தலம். இது பற்றி ராமநாதபுரத்தில் உள்ள மக்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத நிலையே இருந்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.