ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. நாளை தேவரின் 112ஆவது பிறந்த நாள் மட்டும் 57வது குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில், நாளை நடைபெறவுள்ள விழாவில் காலை 9 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதையடுத்து, பசும்பொன் கிராமம் முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு 8 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் கேமராக்கள் மூலம் கண்காணித்தும், ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழா: பாதுகாப்புக்காக 8,000 காவலர்கள் குவிப்பு!