ராமநாதபுரம் மாவட்டம் நந்திசேரி கிராமத்தில் சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பூட்டை உடைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பெரிய அளவிலான வெங்கல குத்துவிளக்கையும், உண்டியலை உடைத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உண்டியலை அருகிலுள்ள கண்மாயில் வீசியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அங்குவந்த காவல் ஆய்வாளர் பிரசன்னா தலைமையிலான காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். பின்பு இச்சம்பவம் குறித்து அபிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.