ETV Bharat / state

மழையின் காரணமாக வாக்குச்சாவடி மைய மேற்கூரை இடிந்து விழுந்து ஐவர் படுகாயம் - மழையின் காரணமாக வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே மழையின் காரணமாக வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்
மழையின் காரணமாக வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 பேர் படுகாயம்
author img

By

Published : Apr 6, 2021, 3:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கண்டிலான் வாக்குச்சாவடியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கண்டிலான் வாக்குச்சாவடி பூத் எண் 219இல், இன்று காலை முதல் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். கண்டிலான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியிலும், அங்குள்ள சமுதாயக் கூடத்திலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மழையின் காரணமாக வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 பேர் படுகாயம்

இன்று காலை அப்பகுதியில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக பூத் எண் 219இல், மழையினால் மேற்கூரை இடிந்து சேதம் அடைந்தது. அப்போது வாக்களிப்பதற்காகக் காத்திருந்த புவனேஸ்வரி, முனியசாமி, பூமி கிருஷ்ணன், தாமோதரன், முருகன் ஆகிய ஐந்து பேருக்கும் காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு முதுகுளத்தூர் வட்டாட்சியர் நேரில் ஆய்வுசெய்தார். தற்போது இடிந்து விழுந்த மேற்கூரைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால், அதிக அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என வாக்களிக்க வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

காயம்பட்ட நான்கு பேரும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். கண்டிலான் கிராமத்தில் 626 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த இயந்திரத்தில் கோளாறு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.