ETV Bharat / state

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி வியூகம் வகுக்கும் தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த்

ராமநாதபுரம்: தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

தேமுதிக
தேமுதிக
author img

By

Published : Jan 11, 2021, 6:59 AM IST

தமிழ்நாட்டில் இன்னும் நான்கு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அதிமுக சார்பில் 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் மூலம் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உரையாற்றிவருகிறார், தமிழ்நாடு முழுவதும் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்காளர்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், தேமுதிக சார்பில் ராமநாதபுரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன. 10) ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

தேமுதிக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
இந்த, ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் தனியார் மஹாலில் தேமுதிக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் கொள்கைபரப்புச் செயலாளருமான அழகாபுரம் மோகன்ராஜ், கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் தங்கமணி, மாவட்டக் தேர்தல் பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி சந்தித்து வெற்றி காண்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சட்டப்பேரவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

முன்னதாக, திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்பு தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : ’கேப்டன் கிளைமாக்ஸில் வருவார்’ - பிரேமலதா விஜயகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.